1) அலுவலக நிர்வாகிகள் (அல்லது) தன்னார்வலர்கள் மத்தியில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்படும் பட்சத்தில் பிரிசிடெண்ட் (அல்லது) பயிற்சி- ஆலோசகர் ஆகியோரின் முடிவே இறுதியானது மற்றும் பின்பற்றப்பட வேண்டியதாகும்.
2) பயிற்சி-ஆலோசகர் (அல்லது) பிரிசிடெண்ட் இருவரும் FOP யூனிட் தொடர்பான எந்த வர்த்தக பரிமாற்றத்தையும் செய்யலாம் மற்றும் அவர்களுக்கு மட்டுமே கல்லூரியின் FOP யூனிட் தொடர்பான கடிதங்கள், எச்சரிக்கை கடிதங்கள், மற்றும் பணியோடு நேரிடையாக (அல்லது) மறைமுகமாக தொடர்புடைய அலுவலகக் கடிதங்களில் கையெழுத்திடும் அதிகாரம் உள்ளது.
3) யூனிட் எந்தத் தடையும் இல்லாமல் செயல்பட பயிற்சி- ஆலோசகர் (அல்லது) பிரிசிடெண்ட் எத்தனை துணை குழுக்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
4) எந்த ஒரு தன்னார்வலருக்கும் (அலுவலக நிர்வாகிகள் மற்றும் பயிற்சி ஆலோசகர் உட்பட) FOP தொடர்பாக செய்யப்படும் எந்த செயலுக்காகவும் எந்தவிதமான லாபமும் அதாவது பணம் அல்லது வேறு ஏதாவது வடிவத்தில் கிடைக்காது. எப்போது கிடைக்கலாம் என்றால் இந்தச் சட்டத்தை மீறி ஏதாவது தற்காலிக வழிகாட்டுதல் வந்தால் மட்டுமே இந்தச் சட்டத்தில் மாற்றம் ஏற்படும்.