போலீஸின் நண்பர்கள்- டாக்டர் பிரதீப் வி. ஃபிலிப் ஐ.பி. எஸ். அவர்கள் 1993 ஆம் ஆண்டு அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த போது துவக்கப்பட்து.

பின் அது1994 ஆம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு முழுவதிலும் செயல்படுத்தப்பட்டது.
சாதாரணமாக இந்த மாதிரியான சமூக தொண்டாற்றும் நிறுவனங்கள் மக்கள் தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்வதற்கும் தங்களுடைய சுயமுன்னேற்றத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் மற்றும் சமூக நலன்களில் முன்வந்து செயலாற்றி தங்களை தாங்களே நிலை நாட்டிக் கொள்வதற்காகவும் ஏற்படுத்தப்படுகிறது.

என்சிசி இளைஞர்களை நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்துவதில் முனைப்பாக இருக்கிறது மற்றும் என்எஸ்எஸ் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது என்றால், எஃப் ஓ பி ஒரு அன்பும் பாசமும் நிறைந்த தலைவரின் முழு ஆற்றலையும் வெளிக் கொணர்வதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறது.

இந்த இயக்கம் அந்த நபரின் முழு ஆற்றலையும் வெளிக் கொண்டு வருவதற்காக முழுமையான முறையில் முயற்சிகளை செய்கிறது அதாவது டாய்-சி, தியானம் மற்றும் சில விஷயங்கள் மூலமாக அவருடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது.