• போலீஸையும் பொதுமக்களையும் நெருக்கமாக கொண்டுவருதல்.
 • பொதுமக்களில் ஜாதி, இனம் அல்லது வர்க்கம் போன்ற பாகுபாடு பார்க்காமல் அவர்களை போலீஸோடு நல்லிணக்கத்தை

ஏற்படுத்த வழி வகுத்தல். இது மக்களின் ஆற்றலை பெருக்குவதற்கான ஒரு வழியாகும்.

 • போலீஸை பற்றி இருக்கக் கூடிய மோசமான எண்ணத்தை மாற்றி இருவழிகளில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துதல்.
 • போலீஸின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிமாக்குதல்.
 • மக்கள் மனத்தில் போலீஸின் பால் ஒரு சொந்தம் போன்ற உணர்வு, மற்றும் பொறுப்புணர்ச்சி- ஆதரவு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்குதல்.
 • பொது மக்களுக்கு தங்களுடைய குடிமை பற்றிய பொறுப்புக்களையும் செயல்பாடுகளையும் சொல்லிக் கொடுத்தல்.
 • சரியான நேரத்தில் சரியான விஷயத்தை சொல்லித் தருதல். மக்கள் மத்தியில் குற்றங்கள் பற்றி அறிவை வளர்ப்பதன் மூலமாக குற்றங்கள் நடப்பதைத் தவிர்த்தல்.
 • படிப்பித்தல்- குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்- இவைகள் குற்றங்கள் நடப்பதை தடுக்கவல்லது.
 • போலீஸூக்கு மக்களின் எண்ணங்கள் அனைத்து மட்டங்களிலும் கிடைக்கும் போதுதான் போலீஸின் நற்செயல்களை மக்களால் எப்போதும் அறிய முடியும்.
 • எஃப்ஓபிக்களில் குடிமை போலீஸை ஈடுபடுத்துவதன் மூலம் சக்தியை பலப்படுத்தும் செயலைச் செய்ய முடியும்.
 • போலீஸின் தேவைகளை பூர்த்தி செய்ய ,பிறவியிலேயே நேர்மறையான எண்ணமுள்ள பெருவாரியான மக்கள் சக்தியை அதாவது மனித வளத்தை போலீஸூக்கு கிடைக்கும்படி செய்தல்.
 • உட்புறமுள்ள வளங்களை மிகக் குறுகிய காலத்தில் எந்த அசந்தர்பத்தையும் சமாளிக்க போலீஸூக்கு கிடைக்கும்படி செய்தல்.
 • போலீஸ் பணி செய்யும் போது அவர்களுடை பணி மற்றும் பொறுப்புக்களை பற்றி பொதுமக்களுக்கு சொல்லித்தருதல்.
 • மனிதத்தன்மைகளை பற்றிக் கற்றுக் கொள்ளுதல் மற்றும் சொல்லித்தருதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *