1. பிரிசிடெண்ட்டின் சிபாரிசின் பெயரில் பயிற்சி ஆலோசகருக்கு எந்த ஒரு தன்னார்வலரையும் அவரிடம் எந்த விளக்கமும் கேட்காமலேயே, பணி நீக்கம் செய்யவோ (அல்லது) தற்காலிக பணிநீக்கம் செய்யவோ (அல்லது) அவருக்கு சரியென்று தோன்றும் எந்த ஒரு முடிவை எடுக்கவோ உரிமையுள்ளது.
  2. FOP யூனிட் தன்னிடம் தக்க காரணங்கள் இருக்கிறது என்று நினைத்தால் எந்த ஒரு தன்னார்வலரின் அந்தப் பணி செய்ததற்கான அத்தாட்சி பத்திரத்தை கொடுக்காமல் தங்களிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும் அதிகாரத்தை பெற்றுள்ளது.
  3. பிரிசிடெண்ட் அல்லது துணை பிரிசிடெண்ட் ஆகிய இருவர் எடுக்கும் நடவடிக்கையை தவிர  மற்ற எந்த ஒரு தன்னார்வலர் மீதும் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளைப் பற்றி  FOPயின் மாநில நிர்வாகியிடமோ – FOP யிடமோ அல்லது FOPயின் திட்ட இயக்குனரிடமோ சொல்ல வேண்டிய அவசியமில்லை.
  4. பதவி நிறைவு பெற்று செல்லும் பிரிசிடெண்ட் அல்லது துணை பிரிசிடெண்ட் ஆகிய இருவரும் அடுத்த பிரிசிடெண்ட் அல்லது துணை பிரிசிடெண்டை மாநில  நிர்வாகி- FOP மற்றும் திட்ட இயக்குனர் –FOP ஆகியோரின் ஒப்புதலோடு தேர்வு செய்யலாம்.
  5. பயிற்சி ஆலோசகரின் ஒப்புதலோடு பிரிசிடெண்டும் துணை பிரிசிடெண்டும் அலுவலக நிர்வாக குழுவினரைத் தேர்வு செய்யலாம்.
  6. எந்த ஒரு தன்னார்வலரும் ஒரு முறை பணிநீக்கம் செய்யப்பட்டால் அவர்களை மாநில நிர்வாகி- FOP அல்லது திட்ட இயக்குனர்- FOP ஆகியோரின் அதிகார ஒப்புதல் இல்லாமல் திரும்பவும் சேர்த்துக் கொள்ள முடியாது.
  7. தன்னார்வலரின் அனைத்துக் கேள்விகள், யோசனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் பயிற்சி ஆலோசகருக்கு பரிசிடெண்ட் வழியாக மட்டுமே அனுப்ப முடியும்.
  8. பிரிசிடெண்ட் மற்றும் துணை பிரிசிடெண்ட்டைத் தவிர மற்ற எந்த அலுவலக நிர்வாகியும் தங்களுடைய பதவியை கல்லூரி வளாகத்திற்கு வெளியே பயன் படுத்தவோ அல்லது, பெயர்பலகை, அடையாள அட்டையை அச்சிடுவது  அவற்றை தங்களுடைய கல்லூரிக்கு வெளியே பயன்படுத்தவது ஆகியவற்றை செய்யவோ கூடாது – அந்த வேலை எஃப்ஓபியோடு தொடர்புடையதாக இருந்தாலும் கூட.